2025 மே 09, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளைக் கடத்திய இருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திய இருவரை, காத்தான்குடி  பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (02) காலை கடமையிலிருந்த பொலிஸார், வீதிச் சோதனையின் போது குறித்த லொறியை மடக்கிப்பிடித்தனர் எனவும்  லொறியில் கடத்தப்பட்டிருந்த 12 மாடுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி சிந்தக விஜேசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X