2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திய ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயமடைந்த  மாடுகளை, சட்டவிரோதமான முறையில் கடத்திய ஒருவரை, மிருகவதைச் சட்டத்தின் கீழ், நேற்று  (09) இரவு கைது செய்துள்ளதாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிர பண்டார  தெரிவித்தார்.

இக்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

மூன்று மாடுகளை, கொக்கடிச்சோலையிலிருந்து காத்தான்குடிக்கு ஏற்றிவந்தபோதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரெனத் தெரிவித்த வவுணதீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X