2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; 460,000 ரூபாய் அபராதம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 மே 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக இனங்கண்ட, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம், 460,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களின் சாரதிகள் அறுவர், உதவியாளர்கள் மூவர், மற்றும் மணல் ஏற்றிச் செல்வதற்கான விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உழவு இயந்திரமொன்றின் சாரதியும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து, கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர்களை, கரடியனாறு பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் நேற்று  (16) ஆஜர் செய்த போது, குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதப் பணம் செலுத்திய பின்பு, உழவு இயந்திரங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

மட்டக்களப்பு, மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன என, மக்களும் செயற்பாட்டாளர்களும் விசனம் வெளியிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X