பேரின்பராஜா சபேஷ் / 2019 ஜனவரி 22 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, புல்லுமலைப் பகுதியில் லொறியொன்றில் சட்டவிரோதமாக பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளைக் கடத்திச் சென்ற நடவடிக்கை, வன காரியாலய அதிகாரிகளால் நேற்று (21) முறியடிக்கப்பட்டது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட லொறியின் சாரதி, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதன்பின்னர், நீதிமன்றால் பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, லொறியும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியன்று, மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு, சந்தேகநபருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மகாஓயா பகுதியிலிருந்து செங்கலடியை நோக்கிய பிரதான வீதியில் சிறிய ரக லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவேளை, அந்த லொறியை இலுப்படிச்சேனைப் பிரதேசத்தில் வன அதிகாரிகள் சோதனையிட்டபோது, மரக்குற்றிகளை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த லொறியில் சுமார் 5 அடிநீளமுடைய 23 தேக்குகளும் முதிரை மரக்குற்றிகளும் காணப்பட்டுள்ளன.
11 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
30 minute ago