Freelancer / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் பிரதேசத்தில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமான முறையில் சில நபர்கள் வேலி அமைத்ததை புகையிரத திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து அக்கற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத பாதுகாப்பு சேவை உதவி அத்தியட்சகர் ஆர்.பி.ஏ.ரத்னமலலவின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட புகையிரத பொறியியலாளர் ஆர்.ஜே.அலெக்சாண்டரின் அனுசரணையோடு வருகை தந்த பொலிஸார் மற்றும் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து புகையிரத காணிக்குள் அமைக்கப்பட்ட வேலியை அகற்றியுள்ளனர்.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் 15 நபர்கள் சட்டவிரோதமான முறையில் வேலி அமைத்த நிலையில் வேலி அக்கற்றப்பட்டு குறித்த நபர்களை காணிக்குள் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago