Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரான் மிருக வைத்தியர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிக் கிராமத்தில் சுமார் 320க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளுக்கு “ரேபிஸ்” எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசி இடப்பட்டதாக, பிரதேச மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி உடஹவத்த தெரிவித்தார்.
சந்திவெளிக்கிராமத்தில், கடந்த வாரம் ரேபீஸ் நீர்வெறுப்பு நோய்க் கிருமித் தொற்றுக்குள்ளாகி அலைந்து திரிந்த விசர் நாய் கடித்து, மூதாட்டி ஒருவர் மரணமானதுடன், சிறுமியொருத்தி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதன் பின்னரே, சந்திவெளிப் பகுதியில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு நீர்வெறுப்பு நோய்க்கு எதிரான தடுப்பூசி இடும் பணிகள் உடனடியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுமார் ஒரு வருட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய விலங்குகளில் தொற்றும் நீர்வெறுப்பு நோய்க் கிருமிக்கு எதிரான இந்தத் தடுப்பு ஊசியை, வீடுகளில் நாய் மற்றும் பூனைகளை வளர்ப்போர், தமது செல்லப் பிராணிகளுக்கு ஏற்றிக் கொள்ள வேண்டுமென, வைத்தியர் அருணி மதுபாஷினி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago