2025 மே 21, புதன்கிழமை

சந்திவெளி சந்தையிலும் பதற்றம்; வர்த்தகர்கள் வெளியேறினர்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, சந்திவெளி சந்தையில் சிறுபான்மைச் சமூகங்களிடையே இன்று (31) ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு, கிரான் வாராந்தச் சந்தையில் வியாபாராம் செய்வது தொடர்பாக, சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில், கடந்த வௌ்ளிக்கிழமை (29) ஏற்பட்ட முறுகல் நிலையால், அங்கிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X