2025 மே 09, வெள்ளிக்கிழமை

சந்துருக்கொண்டான் படுகொலை: 29ஆவது ஆண்டு நினைவேந்தல்

வா.கிருஸ்ணா   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சத்துருக்கொண்டான் சந்தியிலுள்ள நினைவுத் தூபியருகே, நேற்று (09) மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், “உணர்வுள்ள உறவுகள்” அமைப்பால் தாகசாந்தி நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி, இராணுவத்தினருடன் இணைந்து, ஊர்க்காவல் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடிக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 186 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X