2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சமுதாயத்தினுள் ஒழிந்து வாழும் மக்களைப் பூரணப்படுத்துவோம்’

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா, பைஷல் இஸ்மாயில்

“யுத்த காலத்தின்போது மக்களுக்குச் சாரியான முறையில் சிகிச்சைகளை வழங்காததன் காரணத்தால் அம்மக்கள் சமுதாயத்தினுள் மறைந்து  ஒதுங்கியவா்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்” என்று, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் மதுசங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையை மிக வெற்றிகரமாகவும் இலவசமாகவும் முன்னெடுத்துவரும் வைத்திய நிபுணருக்கும் ஊகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு, குறித்த வைத்தியசாலையில் இன்று (30) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள், சத்திர சிகிச்சை முறையை மேற்கொள்ள வசதியற்றவர்களாகவும் சிலர் வசதியிருந்தும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று அதற்கான சத்திர சிகிச்சையைச் செய்ய அச்சப்பட்டவர்களாகவும் சமுகத்தில் ஒழிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

“எமது நாட்டைப் பொறுத்த வரையில், இவ்வாறான சிகிச்சை முறையை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கொழும்பு, கண்டி, காலி போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் ஆளாகியவர்களாகவே காணப்பட்டு வந்துள்ளனர்.

“இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளர்களை இனங்கண்டு, தகுந்த முறையில் அவா்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சைகளை வழங்குவதற்காக அம்மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்குச் சென்று அவர்களின் காலடியில் இச்சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம்” என அவர் தொரிவித்தார்.

அதுமாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடையாளம் கண்டு அவர்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்களை தற்போது நடத்தி வருவதுடன், அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைகளையும், வைத்திய ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள நோயாளா்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கான  சகல வழி வகைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சத்திர சிகிச்சையை மிகத் திறம்பட செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன. அதில் 100 இக்கு 85 சதவீதமான காயங்கள் முகத்தில் ஏற்படுகின்றன. அவற்றை சத்திர சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விபத்துக்குள்ளானவர்களை பழைய நிலைமைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

“அது மாத்திரமல்லாமல், பிறக்கும்போது முகத்தில் ஊனமுற்று பிறக்கும் குழந்தைகள், விபத்துகள் மூலமாக முகங்களில் ஏற்படுகின்ற உடைவுகள், முகத்திலும்  வாய் உற்பகுதிகளில் ஏற்படுகின்ற புற்று நோய்களுக்கு விசேடமான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X