2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதிவரை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்தக் கண்காட்சி பற்றிய நிகழ்ச்சி முன்னோட்டமும் சுருக்க அறிமுகமும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள சதுனா விடுதியில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

இந்த அறிமுக நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தினர், மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசஸ் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X