Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்பிப்பிள்ளை தவக்குமார், எஸ்.சபேசன், பைஷல் இஸ்மாயில்
சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவளக்கடை பிரதான வீதியில் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவிதன்வெளி 15ஆம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நந்தகோபன் எனும் இளைஞன் ஸ்தலத்தில் பலியாகியுள்ளாரென, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, போரதீவிலிருந்து அம்பாறைக்குக் கல் ஏற்றுவதற்காக சவளக்கடை நோக்கிப் பயணித்த லொறியும் தனது அம்மாவின் வீட்டுக்கு அன்னமலை வேப்பயடி பிரதேசத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதன் காரணமாகவே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் லொறியைச் செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
5 hours ago