2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சவுக்கடி இரட்டைக் கொலை: சந்தேகநபரது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:40 - 1     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சவுக்கடி இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரது வீட்டுக்கு முன்னால் பொதுமக்கள், இன்று (23) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம்; கைதுசெய்யப்பட்டுள்ள நபர், தனது வீட்டை விற்று வழக்குப்பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளதால், அந்த வீட்டை எவரும் வாங்கவேண்டாம்; கொலையாளிக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படவேண்டுமென அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன், “சட்டத்தரணிகளே, கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம்”, “கொலையாளிகளைப் பிடித்ததுபோல் விரைவாகத் தண்டனை வழங்க பொலிஸார் உதவுங்கள்”, உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.  

இதேவேளை, இதுபோன்ற சம்பவம் எங்கும் இனிமேல் நடக்கக்கூடாது என்றும், கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும்  என்றும் தாம் எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கூறினர். 

சவுக்கடி பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 27  வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி, அவரது மகனான 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர்  17.10.2017  அன்று இரவு கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில்  சவுக்கடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர், யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த நப​ரொருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்பதுடன், கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களும்  பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 1

  • Lorans Saturday, 25 November 2017 05:41 AM

    தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் ஒரு மனிதன் உயிர் எடுப்பதுக்கு யாருக்கும் உரிமை இல்லை இப்படி பட்ட கொலையாளி தப்பிப்க்க கூடாது யாரும் தயவுசெய்து உதவ வேண்டாம் இளைஞர்கள் சப்போட் அந்த தாய் மகன் குடும்பம் பக்கம் இருக்கும் ok kolyali thappa kudathu thanks

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X