பேரின்பராஜா சபேஷ் / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, சவுக்கடி பகுதியில் இடம்பெற்ற தாய், மகன் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில், நேற்று (29) ஆஜர்செய்யப்பட்ட போது, சந்தேகநபர்களை, டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 27 வயதுடைய திருமதி மதுவந்தி பீதாம்பரம், அவரது மகன் 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு, மூவர் குற்றமற்வர்கள் என, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
பிரதான சூத்திரதாரிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா, சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சகாயராசா சில்வஸ்டர் ஆகியோரது விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கொள்ளையிட்டு, யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட 16 பவுண் தங்க நகைகளையும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .