Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை அமர்விலிருந்து, நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் வெளியேறியதை கண்டித்து, அவருக்கு எதிராக கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் விசேட அமர்வு, இன்று (26) சபை மண்படத்தில் நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சபை அமர்விலிருந்து இடைநடுவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் வெளியேறினார்.
இதையடுத்து சபை ஒழுங்கை மீறி தவிசாளரிடமோ அல்லது சபைக்கோ தெரிவிக்காமல், சபையை அவமதித்து அமர்விலிருந்து வெளியேறியமையை கண்டித்து, காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்குக்கு எதிராக கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதாக, காத்தான்குடி நகபை தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.
விசேட அமர்வாக கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் போது, சபையின் ஒழுங்கை மீறி நகர சபை உறுப்பினர் தனது அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அலைபேசியை சபையில் பாவிக்க கூடாது எனவும் சபை ஒழுங்கை பின்பற்ற வேண்டும் எனவும் நான் கூறினேன்.
இதையடுத்து சில நிமிடங்களில் சபைக்கு எதுவும் கூறாமல், சிப்லி பாறூக் வெளியேறிச் சென்று விட்டார்.
இதையடுத்து, அவரது நடவடிக்கையை கண்டித்து, அவருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, தவிசாளர் அஸ்பர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கிடம் கேட்ட போது,
“சபையின் விசேட அமர்வுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக, தவிசாளர் அவர் சொந்த விருப்பத்துக்கு ஏற்றவாறு கூட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்.
“நிகழ்ச்சி நிரல் ஒன்றை தந்து விட்டு அதற்கு மாற்றாக கூட்டம் நடாத்துவது சபையின் ஒழுங்கல்ல.
“சபையின் நிகழ்ச்சி நிரலை மீறி தவிசாளர் நடந்து கொண்டதை கண்டித்தே நான் சபையிலிருந்து வெளியேறினேன் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
37 minute ago
41 minute ago
43 minute ago