Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷாரா
கொழும்பில், 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வை, மட்டக்களப்பு மறைக் கல்வி நடுநிலையத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தால் சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
யாழ். ஊடக அமையம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், வொயிஸ் ஒப் மீடியா, அரங்கம் ஊடக நிறுவனம், இலங்கை இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணைந்த அனுசரணையுடன் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
“இலங்கை அரசியலில் மக்கள் மயப்படவேண்டிய ஊடக மனோநிலை” என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெறவுள்ள தராகி சிவராமின் நினைவு நிகழ்வில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அ.நிக்சன் உட்பட சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், சிவராமின் நெருங்கிய நண்பர்களும் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருபவருமான சண். தவராஜாவின் “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், புதிய செய்தித்தளமொன்றும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
15 minute ago
27 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
36 minute ago
52 minute ago