2025 மே 21, புதன்கிழமை

சிறுவனுக்கு சரீரப் பிணை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 02 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் கூரையைப் பிரித்து உள்ளிறங்கி லப்டொப், நவீன அலைபேசிகள், பணம், தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதான 13 வயதுச் சிறுவனுக்கு, சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை, ஏறாவூர் பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (01) ஆஜர் செய்தபோது, சிறுவனை ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, வழக்கை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X