Editorial / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் எட்டு வயது சிறுவனைத் தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சிறுவனை கடந்த சனிக்கிழமை (28) இரவுத் தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான மௌலவி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குர்ஆன் பாடசாலையில் கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் குறித்த சிறுவன் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago