Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி, இடமாறிச் செல்லும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கிருபைராஜானை கௌரவிக்கும் வைபவம், புதிய காத்தான்குடி 167சி பல நோக்கு மண்டபத்தில், நேற்று (02) நடைபெற்றது.
பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் இர்பான் ஏற்பாட்டிலும் அவரின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், திட்ட முகாமையாளர் திருமதி சுபந்தினி கண்ணன், கிராம உத்தியோகத்தர் திருமதி சம்ஹா உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாறிச் செல்லும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கிருபைராஜாவை கௌரவித்து, நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது. (N)
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago