2025 மே 07, புதன்கிழமை

சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலை சிறுவர் பூங்கா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவினால் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட   நிதியொதுக்கீட்டில் இந்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண  சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி அல் ஹஸனாத் வித்தியாலயத்துக்கான ஒலிப் பெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டதுடன்,  பூநொச்சிமுனை கிராமிய கடல் மீனவர் அமைப்புக்கான தளபாடங்களும் மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்துக்கான தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X