2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிவில் விமானப் போக்குவரத்து கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 25 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கொழும்புக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவீனமயப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (25) திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மட்டக்களப்பு - கொழும்புக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்யும் ஒன்றாகும்.

நடுத்தரமானவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இதன் கட்டணத்தை குறைக்க வேண்டும். அது தொடர்பில், சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஆராயுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குறைந்த கட்டணத்தை அறவிடுகின்ற போதுதான் கூடுதலானோர் பயன்படுத்துவர். எதிர் காலத்தில் அதன் கட்டணத்தில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். கிழக்கு மாகாணத்தின் பொருளாராத்தினை கட்டியெழுப்புவதற்கு இந்த விமான நிலையம் சிறப்பான பங்களிப்பை செய்யும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X