2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுகயீனமாக அனுமதிக்கப்பட்ட சிசு மரணம்

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள, மஞ்சந்தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த, 3 மாதங்களேயான பெண் சிசுவொன்று, சகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மரணமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா ஷெ‪ய்னப் என்ற, பிறந்து 3 மாதங்களேயான இக்குழந்தை, சுகயீனம் காரணமாக இன்று (03) காலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இக்குழந்தை என்ன நோயினால் பீடிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக வைத்தியசாலையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X