2025 மே 23, வெள்ளிக்கிழமை

சுகாதார உத்தியோகத்தர்கள் 38 பேருக்கு நியமனங்கள்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், பைஷல் இஸ்மாயில்

 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால்,  பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் 38 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாணத்தின் 4 பிராந்தியங்களுக்கும் கீழுள்ள வைத்தியசாலைகளுக்குமாக, 16 தாதிய உத்தியோகத்தர்களும், 22 வோர்ட் மாஸ்டர்களுக்கும், இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்காக பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகின்றோம். அதன்மூலம் பல வெற்றிகளையும் கண்டுள்ளோம். மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் தரவுகளை கவனத்திற்கொண்டே, இந்நியமனங்கள் யாவும் வழங்கப்பட்டுள்ளன.

“எமது மாகாணத்தின் சுகாதார வளர்ச்சியை மேம்படுத்த கட்டடங்களைக் கொண்டோ அல்லது தளபாடங்களைக் கொண்டோ, அதனை முன்னெற்ற முடியாது.

“இந்த முன்னெற்றத்துக்கு உங்களின் பங்கு மிக அத்தியவசியமானது அதற்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உங்களின் ஓர் அர்ப்பணிப்பின் ஒரு பாகம்தான் இந்தப் பதவி முன்னெற்றத்துக்குக் காரணமாக அமைந்ததுள்ளன” என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X