2025 மே 07, புதன்கிழமை

சுகிர்தராஜனின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல்

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன், கனகராசா சரவணன், ஆர்.அனிதா

2006ஆம் ஆண்டு, திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14ஆவது நினைவு தின நிகழ்வுகள், மட்டக்களப்பு, காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில், நேற்று (25) நடைபெற்றது.

“படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்” எனும் தொனிப்பொருளில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ்.ஊடக மய்யம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

கிழக்கு மாகாண  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ.தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு  மலர்மலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றி, அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுரையாற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X