Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன, க.விஜயரெத்தினம்
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், இன்று (19) இடம்பெறுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெறுகிறது.
அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்காக அவரின் மீது கருணை காட்டி, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, அன்னை பூபதியின் நினைவு தினமான இந்தத் தினத்தில் நாங்கள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
59 minute ago
3 hours ago