2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘சுயநலத்தால் கை நழுவுகின்றன’

வா.கிருஸ்ணா   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலுள்ள அர்ப்பணிப்பு இன்மை, ஒற்றுமையின்மை, சுயநலங்கள் காரணமாகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கை நழுவிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக, கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் இலவச வைத்தியமுகாமொன்று, திராய்மடுவில் இன்று (02) நடைபெற்றது.

இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனங்களை தமிழ் தலைமைகள் புறக்கணித்து செயற்படுவதன் காரணமாகவே, தமிழ் மக்கள் இன்று மிக மோசமான நிலையில் இருக்கின்றனர்.

“தமிழ் மக்களுக்கு தனி அரசை தவிர வேறு வழியில்லையென்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரால் முன்வைக்கப்பட்ட சமஸ்டி கட்டமைப்யையே இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.

“ஆனால், தமிழ் தலைமைகள் ஒற்றுமைப்படவேண்டியதன் அவசியத்தை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X