2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

செங்கலடி நகரை அபிவிருத்தி செய்யும் விசேட கூட்டம்

வா.கிருஸ்ணா   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின், செங்கலடி நகரை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று(21) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பி.புண்ணியமூர்த்தி, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர், செயலாளர், செங்கலடி நகர வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

செங்கலடி, பொதுச்சந்தை, மிகவும் மோசமான நிலையிலுள்ளமை தொடர்பில், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு, தான் கொண்டுசென்றதையடுத்து, குறித்த சந்தையை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு, 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, வியாழேந்திரன் எம்.பி தெரிவித்தார்.

செங்கலடி நகரில், பஸ் நிலையமொன்று அமைப்பது தொடர்பிலும், எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், நகரை அபிவிருத்தி செய்யும் வகையில், நகரத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பிரதேச சபைக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகரில் பல வியாபார நிலையங்கள், பொதுச்சந்தை என்பன இருப்பினும், குடிநீரைப் பெறுவதிலும் இயற்கைக் கடன்களைச் செலுத்துவதிலும், நகருக்கு வருவோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனவும், அவற்றை நிவர்த்திசெய்வது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதெனவும், வியாழேந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X