Princiya Dixci / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, எஸ்.சதீஸ், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் செட்டிப்பாளையத்தில், இன்று (18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை அதே வீதியில் பயணித்த காரொன்று முந்திச் செல்ல முயற்சித்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணம் செய்த இருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர் என்பதுடன், காரின் முன் பகுதியும் பஸ்ஸின் பின் பகுதியும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
18 minute ago
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
43 minute ago
46 minute ago