2025 மே 07, புதன்கிழமை

சொகுசுக் காரில் கஞ்சா கடத்திய மூவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மன்னாரில் இருந்து அம்பாறை – கல்முனைக்கு சொகுசுக் காரில் கேரளாக் கஞ்சா கடத்திய மூவரை, மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து, நேற்று (10) நண்பகல் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்

புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, வாழைச்சேனை பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில்  காத்திருந்தனர்.

இதன்போது, மன்னாரில் இருந்து கல்முனையை நோக்கி சென்ற குறித்த காரை பொலிஸார் திடீரென  நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் இருந்து 7 கிலோ 675 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன், மூவரைக் கைது செய்ததுடன், காரையும் மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர்கள், கல்முனை, உடையார் வீதியைச் சேர்ந்த 21, 42, 28   வயதுடையவர்கள் எனவும் இவர்கள், விற்பனை செய்வதற்காக  மேற்படி  கஞ்சாவைக் கொண்டு வந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X