2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சொகுசுக் கார் விபத்தில் இருவர் காயம்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியின் உப தபால் அலுவலகத்துக்கு முன்னால், அதி சொகுசுக் காரொன்று, இன்று (20) அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த அதி சொகுசுக் கார் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில், சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X