2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி சேவைப் பிரிவின் கீழ் மூன்று கிராமங்கள் புதிதாக இணைந்தன

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சுகாதார சேவைகள் பராமரிப்பிலிருந்த சில கிராமங்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி சேவைப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சேவைகள் இலகுபடுத்தலுக்காக, இந்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதன்படி இதுவரை காலமும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சேவைப் பரப்புக்குள் இருந்த ஏறாவூர் 4ஆம் 5ஆம் குறிச்சிகள் மற்றும் எல்லை நகர் ஆகிய கிராமங்களே, தற்போது செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மூன்று கிராமங்களிலும் 1,140 குடும்பங்களைச் சேர்ந்த 3,892 பேர் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X