2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சுதேச மருத்துவத்துறைக்கு நிதி தேவை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஏ.எஸ்.எம்.யாசீம், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத்துறையை நாடிச் செல்லும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுதேச மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய சுமார் 100 மில்லியன் தேவைப்படுவதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில்  ஞாயிற்றுக்கிழமை  அவர் வெளியிட்ட அறிக்கையில், 'சுதேச மருத்துவத்துறையின் தற்கால தேவை கருதியும் அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குமான விடயங்களில் மத்திய சுகாதார அமைச்சு கவனம்; செலுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பல வேண்டுகோள்களை முன்வைத்து சுதேச மருத்துவத்துறையின் தேவைக்காக நிதியொதுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X