Gavitha / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையுடன், பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இவ்வருடம் கல்வி பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு, வெள்ளிக்கிழமை (23) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம், கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், வளவாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டதுடன், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இவ்வருடம் கல்வி பொதுத்தர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago