2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சேமிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

புகைத்தல் மற்றும் மதுபானத்தை ஒழித்து வீட்டில் சேமிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று சனிக்கிழமை (31) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் புகையிலை மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் வங்கியிலிருந்து ஆரம்பமாகி மகாத்மா காந்தி வீதி, முனை வீதி, திருமலை வீதிவரை சென்று திரும்பியது.

தேசிய சேமிப்பு வங்கி மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் எஸ்.வி. சுவேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில், வங்கி ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதோடு பயணிப்போர்களுக்கும் வழங்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X