Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில்; பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளுக்கு உரிமை கோரும் 1,500 ஏக்கருக்கான உரித்தாவணங்களை அப்பிரதேச செயலகத்தில் கையளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
உரிமை கோரும் காணிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தும் ஆவணங்களின் மூலப்பிரதிகளையும் போட்டோப் பிரதிகளையும் சரி பார்ப்பதற்காக பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலாளர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய, ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தனிடம் சட்டத்தரணி எம்.ஐ.எல்.எம்.பழீல், காணியை இழந்த விவசாய அமைப்புகளின்; பிரதிநிதிகள் ஆகியோருடன் தானும் திங்கட்கிழமை (19) சென்று உரித்தாவணங்களைக் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் உதவிப் பிரதேச செயலாளரிடம் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தபோது, 'மேற்படி காணிகளில்; பூர்வீகமாக விவசாயம் செய்தும் வாழ்ந்தும் வந்தோருக்கு, 1990ஆம் ஆண்டும் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக தங்களின்; சொத்துகளைக் கைவிட்டு வெளியேற நேரிட்டது. இவர்களின் காணிகள் சுமார் 1,500 ஏக்கர் தற்போது இழக்கப்பட்டுள்ளன.
இவர்களிடம்; காணி உரித்துக்கான 03 வகையான ஆவணங்கள் உள்ளன. சொர்ணபூமி உறுதிப்பத்திரங்கள், காணி ஒப்பம், வருடாவருடம் புதுப்பிக்கின்ற மற்றும் வரி செலுத்துகின்ற ஆவணங்களே உள்ளன' என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago