Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள, பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்துள்ள மாணவர்கள் உயர் கல்வியைப் பெற்று, அதன் மூலம் சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் மூலம் பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் இணைப்பாளத் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்துக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல் வழங்கும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.
இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் மாணவர்களால், நிறுவனத்துக்கு முன்பாக விழிப்புணர்வு நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது.
மேலும், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் பாடநெறிகள் மற்றும் அனுமதி விண்ணப்பங்கள் போன்றவை மாணவர்களினால் விநியோகிக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டுக்கு முன்னர் உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா, தகவல் தொழில்நுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா, ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா போன்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பகுதிநேரம் மற்றும் முழு நேரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பாடநெறியில், மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வகையில், இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வின்போது ஜனாதிபதியின் பதவியேற்பு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பாடநெறி தொடர்பான விபரங்களையும் விண்ணப்பங்களையும் பெறவிரும்புவோர் மட்டக்களப்பு, ஆரையம்பதி, கோவில்குளத்தில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் கல்விசார் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலனை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது 0652247519 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago