Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர், மீராகேணி கிராமத்தில் இரு சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் இன்று திங்கட்கிழமை பகல் ஏறாவூரில் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை 11 வயதுடைய இரு சிறுவர்கள் மிச்நகர் மீராகேணி கிராமத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்விடத்துக்கு சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் சிறுவர்களை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள பற்றைக்காடுகளுக்குள் கொண்டு சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து குறித்த மூன்று சந்தேக நபர்களும் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர்களில் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago