Princiya Dixci / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இன்றைய விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மிக மோசமான காலநிலை காரணமாகவே இவ்விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவலாயம் ஆகியவற்றுக்குச் சென்று பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், பருவகால அடைமழை பெய்ய தொடங்கியிருப்பதால் ஜனாதிபதியின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறுமா என்ற கேள்விகளும் முன்னரே எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025