2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 27ஆம் திகதி அன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்வதையொட்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராயும் விஷேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை(17) நடைபெற்றது.

 இதில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள்அதிகாரிகள்  மற்றும் மத தலைவர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டன.மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையில் நடைபெறவுள்ள தம்ம போதனை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் பிள்ளையார்  ஆலயம் மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாயல், உட்பட கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X