2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்; ஏனைய தினங்களில் அதிகாலை மற்றும் மாலையில் 6 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா பணித்துள்ளார்.

தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில்  இரவு  வேளைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றமை தொடர்பில்  
மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா ஆகியோரின் கவனத்துக்கு செவ்வாய்க்கிழமை (4)  பெற்றோர் கொண்டுவந்தனர்.

இதனை அடுத்தே, இப்பணிப்புரையை நீதவான் விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .