Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த காலங்களை விட சற்று குறைந்து வருவதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி வி. குணராஜசேகரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (23) விவரம் தெரிவித்த அவர், “ஜூன் 07ஆம் திகதி தொடக்கம் ஜூன் 12 ஆம் திகதி வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 09 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
“இதேவேளை, வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago