ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

தங்க நகைகள் கொள்ளைச் சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரை, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் உத்தரவிட்டார்.
காத்தான்குடி பிரதேசத்தில், வீடொன்றை உடைத்து, அங்கிருந்த நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரும் குறித்த நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் ஒருவருமே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் பெறுமதியான தங்க நகைககளும் உருக்கிய நிலையில் 30 கிராம் தங்கமும் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய, குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினரே, மேற்படி நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago