எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்புத் திருமலை வீதி, பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கக் கட்டடத் திறப்பு விழா, இம்மாதம் 15ஆம் திகதி காலை 09 மணியளவில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெறவிருக்கின்ற இந்த விழாவில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி. சுரவணபவன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, தமிழ் சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, சங்கப் பொருளாளரும் கட்டடக் குழுத் தலைவருமான தேசபந்து மு.செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு, குறித்த கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.
இதன்போது, பிள்ளையாரடி, புரவிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, தமிழ்ச் சங்கக் கட்டட வாசலில் வரவேற்பு உபசாரங்கள் நடைபெறவிருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து கட்டட நிர்மாண கொடையாளிகளின் நாமம் பொறித்த நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்யப்பட்டு, கட்டட வாசல் முன்றலில் காட்சியளிக்கும் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திறப்பு விழா நடைபெறவுள்ளது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026