வா.கிருஸ்ணா / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும், தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டுமென, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தனிப்பட்ட அமைப்பு, கட்சி , நபர் சார்ந்த நலன் எவையும் தீர்மானம் எடுக்கும்போது கருத்தில் கொள்ளப்படாது, தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டுமென்றார்.
ஆனால், நிகழ்வுகளும் நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுவதாகக் கூறிய அவர், தமிழ்த் தேசியத்தின் அவசியம் உணரப்பட்டே தமிழ் ஒற்றுமை வலுவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஒற்றுமை, சிலரது தனிப்பட்ட அபிலாசைகளுக்குத் தாரை வார்க்கப்படக்கூடாது என்பது தமிழ்த் தேசியத்தை நேசித்த, நேசிக்கும் தன்போன்றவர்களின் அவாவும் ஆதங்கமும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .