Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், எஸ்.பாக்கியநாதன்
“புதிய அரசமைப்பையும் அதிலே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தென்பகுதி மக்கள் ஆரோக்கியமான கருத்தாடல்களை செய்துகொண்டிருக்கின்றனர்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
“எனினும், அதற்கு எதிரான ஒரு சில கருத்துகளும் வந்துகொண்டிருக்கின்றன“ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள், மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (26) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடரந்து உரையாற்றுகையில்,
“புதிய அரசமைப்புச் சட்டம் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், பல பாகங்களிலிருந்து பலவிதமான கருத்துகள் வெளிவரும் நிலையில், கடந்த அமைச்சரவைக் கூட்ட முடிவில் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, தமிழ் மக்களின் போராட்டங்கள் மற்றும் எழுச்சிகள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஊடகவியலாளர்களே கூறியுள்ளார்கள்.
“இராணுவ அதிகாரி ஒருவர், புதிய அரசமைப்புக்கு ஆதரவாகக் கருத்து வெளியிடுபவர்களை, ஆதரவுவழங்குபவர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டுமெனக் கூறியுள்ளதை, அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கண்டித்துள்ளார்.
“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தென்பகுதி மக்கள், நமக்கு ஆதரவான கருத்துக்களை வலியுத்துகின்ற விடயத்தை கருத்தில்கொண்டு தமிழ் மக்களும் தலைவர்களும் எமது தீர்வுக்கான சிறந்த நிகழ்ச்சி நிரலை அமைத்துக்கொண்டு, ஒரே தலைமையின் கீழ் சிறந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் உறுதியுடனும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025