Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கு, வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் கறுவாக்கேணி சமூக சேவைகள் நிலையத்தில், நேற்று (24) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என்பதில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது.
“தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாற்றுக் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவார்களா? அல்லது எந்த கட்சியோடு இணைவார்கள் என்று இப்போது எல்லோர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் கட்சி யாருடனும் இணைந்து போட்டியிடாது.
“இதற்கு முன்னர் நாங்கள் எந்தக் கட்சிகளோடும் சேர்ந்து இருந்தாலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிடும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இரண்டாக பிரிந்து விட்டது என்று பலர் பேசுகின்றார்கள் அவ்வாறு எப்போதும் இடம்பெறாது” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன் மற்றும் நா.திரவியம் ஆகியோரது கிழக்கு மாகாண சபையின் பன்முகபப்டுத்தப்பட்ட மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியில் இருந்து, எட்டு பேருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இரண்டு பேருக்கு மா அரைக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago