Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்துக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம், மட்டக்களப்பு, திராய்மடு பிரதேசத்தில் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.
கம நல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி.வீரசேகர அதிதியாகக் கலந்துகொண்டு, ஆய்வூகூடத்தைத் திறந்து வைத்தார்.
இத்திட்டத்துக்காக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டு, திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு கூடம், இப்பிராந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமென, கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப்பொருள்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம், விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
3 hours ago