2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தற்கொலைதாரியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு அனுமதி மறுப்பு

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பாகங்களை, காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி நகரசபை அனுமதி மறுத்துள்ளது.   

காத்தான்குடி நகர சபையின் விசேட அமர்வு, இன்று (12) நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட அமர்வில், தற்கொலைதாரி அசாத்தின் உடற்பாகங்களை எக்காரணம் கொண்டு காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி நகரசபை அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X