2025 மே 21, புதன்கிழமை

தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டது

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது.

இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு, அந்த காணிகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X