Janu / 2024 மார்ச் 07 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து அதன்குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த கைக்குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்

8 hours ago
8 hours ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
28 Apr 2026