2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

திட்டமிடல் இன்மையால் பொதுமக்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - செங்கலடி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச சபையின் சரியான திட்டமிடல் இல்லாத, அசமந்தப் போக்குத்தனமான வேலைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் சாடுகின்றனர்.

கடந்து சில வாரங்களுக்கு முன் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேசயினால் செங்கலடி பொதுச் சந்தையினுள் கிரவல் மண் போடப்பட்டதாகவும் அதன் பின் உரிய பராமரிப்பு இன்மையாலும் தற்போது பெய்துவரும் தொடர்மழையாலும் குறித்த பகுதி சேறும் சகுதியாகவும் இருப்பதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக, மக்கள் தெரிவித்தனர்.

எனவே, செங்கலடி பிரதேச சபை இப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி, தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .